சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். அந்த வகையில் சனிபகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
எந்த ராசிக்கு ஏழரை சனி:
ஏழரை சனி என்பது, ஒரு நபரின் முந்தைய ராசியில் சனி பெயர்ச்சி ஆகும்போது ஏழரை சனி உருவாகிறது. அந்த வகையி ல் இந்த ஆண்டு 2025 சனி பெயர்ச்சி ஆனது மேஷ ராசிக்கு முந்தைய ராசியான மீன ராசியில் நடக்கிறது. எனவே, மேஷ ராசியினருக்கு 2025 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏழரை சனி தொடங்குகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் வரை ஏழரை சனியின் தொடக்க சனியான விரையசனி நடைபெறப்போகிறது. அதேபோல் மீன ராசிக்கு தற்போது நடக்கும் விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.
கும்ப ராசிக்கு தற்போது நடக்கும் ஜென்ம சனி முடிந்து ஏழரை சனியின் இறுதி சனியான பாத சனி நடக்க இருக்கிறது.
மீன ராசியில் சனி பெயர்ச்சி ஆவதால், மீன ராசியும், அதற்கு முன் இருக்கும் கும்ப ராசியும், மீன ராசிக்கு பின் இருக்கும் மேஷ ராசிக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இந்த வருடம் 2025, சனி பெயர்ச்சியினால், சனியின் பார்வையில் இருந்து முற்றிலும் தப்பிக்கும் ராசியாக மகர ராசி, கடக ராசி மற்றும் விருச்சிக ராசியும் இருக்கிறது. இந்த மூன்று ராசிகளுக்கும் எந்த விதமான பாதிப்பும் இருக்காது.