மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பழைய சிக்கல்கள் குறையும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.முன் கோபத்தை குறைக்கவும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பெண்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திடீர் பண வரவுகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.தேக ஆரோக்கியம் பலம் பெறும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்ர்களே, குடும்ப நலம் மேலோங்கும். நன்மை கிடைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு இருக்கும். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.தொழில்களுக்காக புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பண சேமிப்பு நகை சேமிப்புகள் இருக்கும்.கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள் தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிரியமானவர்கள் உதவி கேட்டு வருவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பாகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும்.பண சேமிப்பில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன ஸ்தாபம் காரணமாக நெருக்கமான ஒருவரை பிரிய நேரிடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அடிப்படை வசதிகள் உயரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.புதிய வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்
இரவு 07:10 மணிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடல் ஒவ்வாமை தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும்.உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
மகரம்
மகர ராசி நண்ர்களே, இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பணி சுமை கூடும்.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வரும்.உத்யோகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர்களால் கலகம் உண்டாகும். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பெற்றோர்கள் ஒத்துழைப்பு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.