அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர்,அருணகிரிநாதர் என தெய்வவடிவங்களான அடியார்கள் கொண்ட அதிசய நிகழ்வுகளின் புராணம் கேட்டு இருந்தாலும் என்னைப் போன்ற அறிவுக் கொழுந்துகள் ,அவற்றை நம்ப மறுக்கும் ,என்பதால் அவ்வப்பொழுது அடியார்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
1929 ஆம் ஆண்டு தமது 80 வயதில் நிர்விகல்ப சமாதி அடைந்த பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் நம் சமீபத்திய தலைமுறை சார்ந்தவர்.
அருணகிரி நாதர் போலவே தீவிர முருக பக்தர்.ஒன்றல்ல... இரண்டல்ல. 6666 பாடல்கள் பாடியிருக்கிறார்.
அவற்றில் சண்முக கவசமும் , தகராலய ரகசியமும் மிகப் பெருமை உடையவை.
கந்தர் சஷ்டி கவசம் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமானது. அதன் பாதிப்பு சண்முக கவசம் எழுதினார்.
எழு வருடங்களுக்கு முன் நான் எலும்பு அறுவை சிகிச்சை பெற்று இருந்த சமயம் சண்முக கவசம் படித்துப் பெரும் பயன் பெற்றேன்.
வயதான கடைசி காலத்தில் ,1923 டிசம்பர் மாதத்தில் , காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை தந்த இங்கிலாந்தைச் சேர்ந்த எலும்பு மருத்துவர் அவரது கால் xray பார்த்து இவர் இனி நடக்கவே முடியாது எனச் சொல்லி சென்றார்.
முருகன் மயிலில் வந்து அவர் கால் குணப்படுத்தி அடுத்த நாள் அவர் எழுந்து நடக்க அந்த வெள்ளை மருத்துவர் அதிசயித்து ஆவணமாய் பதிவு செய்து இருக்கிறார்.அவரும் முருகனும் பேசிக் கொள்வார்கள் என்றும் கூட அவர் உடன் இருந்தவர் சொல்வார்கள்.
சிவனும் முருகனும் வெவேறு தெய்வங்கள் அல்ல ,இரண்டும் ஒன்று என நிலை நிறுத்துபவர்.வெள்ளை ஆடைதான் அணிந்து வந்தார்.சைவத் துறவிகள் அமைதிக்கு அடையாளமாக எதிர்வாதம் புரியா நிலை எடுத்துக் காட்ட வள்ளலார் போல வெண்ணிற ஆடை அணிவது வழக்கம்.
ஸ்வாமிகள் காசியில் குமர குருபரர் மடத்தில் தங்கியிருந்த சமயம் அவரின் துணிகள் காணாமல் போக அந்த மடத்தவர் செவ்வாடை கொடுக்க அது முருகன் உத்திரவு என எண்ணி அன்றிலிருந்து செவ்வாடை அணிந்தார்.
தேவாரத்தில் கோளாறு பதிகம் அனைவருக்குிம் தெரிந்த பதிகம். முதல் பாடல் நவக்கிரக ங்களின் பாதகம் சிவனருளால் நம்மை அண்டாது என்கிற வகையில் , "வேயுறு தோளி பங்கன் .."
எனத் தொடங்கும் பாடலில் பாடியிருப்பார்.
பாம்பன் ஸ்வாமிகள் சிவலோக சுந்தர மாலையில் முதல் பாடல் பாருங்கள்.
பரிதி மதி சேய் அரி பொன் பளிங்கு சனி பாம்புகளும்
விரிதலை நாள் வேளைகளும் மிகைஅடு நின் அடியவர்கட்கு
உரிய நலம் புரியுமன்றி ஒரு போதும் படர்புரியா
தெரியலரும் தொண்டிழைப்பார் சிவலோக.